சுட்ட பழம் உண்மையிலேயே மோகனை சுட்டு விட்டது. பிரபல இதழ் ஒன்று படத்தை கெட்ட பழம் என விமர்சனம் செய்ததில் இந்த மைக் ராஜாவுக்கு ரொம்பவே வருத்தம். என்ன செய்ய... உண்மை சுடும்.
மோகனின் விருப்பத்துக்குரிய படங்களின் பட்டியலை எடுத்தால் அதில் கண்டிப்பாக பாலுமகேந்திரா கன்னடத்தில் இயக்கிய கோகிலா இடம்பெறும். மோகனை தமிழகம் தாண்டி ரசிக்க வைத்த படம்.
சுட்ட பழம் கொடுத்த கசப்பான முடிவால் மீண்டும் கன்னடம் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார், மோகன். அடுத்து இவர் நடிக்கும் படம் கன்னடத்தில் தயாராகிறது. பெயர், கவுதமன்.
கவுதமனாவது கவிழ்க்காமல் இருக்க வேண்டும்.