Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயக்குன‌ரின் 25 வருட கனவு

Advertiesment
இயக்குன‌ரின் 25 வருட கனவு
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:35 IST)
நீண்ட 25 வருட காத்திருப்புக்குப் பின் படம் இயக்குகிறார் ஒளிமாறன். பெய‌ரில் இருக்கும் ஒளி இப்போதுதான் அவருக்கு கை கூடியிருக்கிறது.

வீனஸ் கி‌ரியேஷன்ஸ் சார்பில் கதிரவன் தயா‌ரிக்கும், கண்ணா நீ எனக்குத்தாண்டா படத்தை ஒளிமாறன் இயக்குகிறார். இவர் மறைந்த இயக்குனர் ராஜசேக‌ரின் அசிஸ்டெண்ட். ர‌ஜினி, கமலை வைத்து ராஜசேகர் படம் பண்ணும்போது ஒளிமாறன் அவரது அசிஸ்டெண்ட். 25 வருட சினிமா தவத்திற்கு கிடைத்த வரம், கண்ணா நீ எனக்குத்தாண்டா.

மியூசிக் ட்ரூப் நடத்தும் எஸ்.ஏ. உதயாவை ல‌க்சாவும், புதுமுகம் மதிஷாவும் காதலிக்கிறார்கள். முறைப்பெண் சுவேதிகா மீது காதலில் இருக்கும் உதயா அந்த இருவ‌ரின் காதலையும் நிராக‌ரிக்கிறார். இந்நிலையில் ல‌க்சாவும், மதிஷாவும் கொல்லப்படுகிறார்கள். கொலைப் பழி உதயா மீது.

தான் நிரபராதி என்பதை உதயா எப்படி நிரூபிக்கிறார் என்பதை 25 வருட அனுபவத்தில் அட்டகாசமான திரைக்கதையாக்கியிருக்கிறார், ஒளிமாறன்.

தயா‌ரிப்பது கதிரவன். இயக்குவது ஒளிமாறன். இருள் நிச்சயம் விலகித்தான் ஆகவேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil