அடடா என்ன அழகு படத்தில் அறிமுகமானவர், நிக்கோல். படம் இன்னும் வெளியாகவில்லை. படத்தில் இவரது ஸ்டில்களைப் பார்த்து அடுத்தப் படத்துக்கு அடவான்சுடன் காத்திருப்போர் நாளொரு வண்ணம் அதிகரித்து வருகிறார்கள்.
சுதிஷ்சங்கர் இயக்கும் ஆறுமனமே படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார் நிக்கோல். இன்னொருவர், நம்நாடு கார்த்திகா (மேரேஜ் என்ன ஆச்சு மேடம்?).
இந்தப் படத்தில் முதலில் ஒப்பந்தமானவர், பாயல் யாதவ். ட்ரீம்ஸ் படத்தில் அறிமுகமானவர். படப்பிடிப்பு தொடங்கும் முன்பே பாயலை நீக்கிவிட்டு நிக்கோலை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.