பூ பார்த்துவிட்டு வருகிறவர்கள் படத்தின் நாயகி பார்வதிக்கு மானசீகமாக ஒரு விருது கொடுத்துவிட்டே வீடு திரும்புகிறார்கள். மாரியாக பார்வதி மாறவில்லை, வாழ்ந்திருக்கிறார்.
இந்தப் படத்துக்காக பார்வதிக்கு விருது கிடைக்குமா என்பதுதான் இப்போது ஓடிக் கொண்டிருக்கும் ஹாட் டாபிக். தேசிய விருதுக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால், அவர் சொந்தக் குரலில் பேசியிருக்க வேண்டும். இது எந்த விருதுக்கும் பொருந்தும்.
பூ படத்தில் பார்வதியை சொந்தக் குரலில் பேச வைக்க வேண்டும் என்றுதான் நினைத்தார், சசி. ஆனால் பார்வதி குரலின் மலையாள மணம் கேரக்டருக்கு பொருந்தாததால் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பார்வதிக்காக குரல் கொடுத்தார்.
இதுதான் பிரச்சனை. நன்றாக நடித்திருந்தும் இரவல் குரலால் பார்வதிக்கு விருது அதிர்ஷ்டம் கேள்விக்குறியாக உள்ளது. பருத்திவீரனில் ப்ரியாமணி சொந்தக் குரலில் பேசியதால்தான் அவருக்கு விருது கிடைத்தது என்பது முக்கியமானது.
பார்வதிக்கு விருது கிடைக்குமா? அரசு அறிவிக்கும் வரை சர்ச்சை தொடரும்.