Publish Date: Tue, 06 Jan 2009 (20:28 IST)
Updated Date: Tue, 02 Dec 2008 (15:06 IST)
விமர்சனங்களைத் தாண்டி உலகம் முழுவதும் வசூலை அள்ளிக் குவிக்கிறது, வாரணம் ஆயிரம். யு.கே. யில் சென்றவாரம் 16வது இடத்தை பிடித்த இப்படம் இந்த வாரம் 29வது இடத்தில் உள்ளது.
சென்னை பாக்ஸ் ஆபிஸில் வாரணம் ஆயிரம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் கௌதம் படத்தின் வசூல், 3.16 கோடிகள். அஜித்தின் ஏகன் இதுவரை சென்னையில் வசூலித்ததைவிட (3.01 கோடி) இது அதிகம்.
யு.கே.யில் வாரணம் ஆயிரம் இதுவரை 56.54 லட்சங்கள் வசூலித்துள்ளது. சமீபத்தில் எந்த தமிழப் படமும் இந்த வசூலை எட்டியதில்லை. மாநகரங்களில் இருக்கும் மெகா வசூல் புறநகர் பகுதிகளில் இல்லை என்பதும் முக்கியமானது.
மொத்தத்தில் போட்டதை வசூலித்திருக்கிறது, சூர்யாவின் சிக்ஸ் பேக் படம்.