Publish Date: Tue, 06 Jan 2009 (20:27 IST)
Updated Date: Tue, 02 Dec 2008 (13:54 IST)
பாலசந்தரின் சிஷ்யர் தாமிரா இயக்கும் ரெட்டைச்சுழி படத்தில் முதல் முறையாக பாலசந்தரும், பாரதிராஜாவும் இணைந்து நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
படப்பிடிப்புக்காக சென்ற மாதமே கிளம்பியிருக்க வேண்டும். சிகரமும், இமயமும் தயாராகாததால் படப்பிடிப்பு இந்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. குழந்தைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் எடுக்க தீர்மானித்துள்ளார், தாமிரா.
நடிக்க சம்மதம் தெரிவித்தாலும் பாலசந்தரின் உடல்நிலை ஒத்துழைக்குமா என்பது சந்தேகம். படத்தின் போட்டோசெஷனுக்கு வந்த அவர் மிகவும் தளாந்து காணப்பட்டதாக கூறுகிறார்கள் உடன் இருந்தவர்கள். இதனால் பாலசந்தருக்கு பதில் வேறொருவரை தாமிரா தேடிக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.