Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாக்ஸ் ஆஃபிஸில் புதுப் படங்கள்

Advertiesment
சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிஷா புயல் எல்லாம் அவன் செயல் மகேஷ் சரண்யா மற்றும் பலர் பூ வசூல்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:27 IST)
இஷ்டத்திற்கு வீசிய நிஷபுயலால் கஷ்டத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் தயா‌ரிப்பளர்கள். புதுப் படங்களின் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரத்தைப் பார்த்தாலே இந்த கலவரம் தெ‌ரியவரும்.

படம் வெளியான முதல் மூன்று நாள் வசூல் முக்கியமானது. புயல், மழை காரணமாக மூன்று நாள் வசூலில் பலத்த அடி. சென்ற வெள்ளிக்கிழமை வெளியான எல்லாம் அவன் செயல் படம் முதல் மூன்று நாளில் 2.9 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.

மகேஷ் சரண்யா மற்றும் பலர் சற்று பரவாயில்லை. மூன்று நாள் வசூல் 4.8 லட்சங்கள். 25 லட்சங்களுக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட சசியின் பூ 10.2 லட்சங்களை மடடுமே அறுவடை செய்துள்ளது.

மழையினால்தான் இந்த மந்தம். பூ ஓடும் திரையரங்குகளில் நிரம்பி வழியும் கூட்டமே இதற்கு சான்று.

Share this Story:

Follow Webdunia tamil