பொல்லாதவன், படிக்காதவனைத் தொடர்ந்து மேலுமொரு ரஜினிபட தலைப்பு, போக்கிரி ராஜா. ரஜினி பட தலைப்பை இனி பயன்படுத்த மாட்டேன் எனறு சொன்ன தனுஷ்தான் போக்கிரி ராஜாவின் ஹீரோ.
ராஜ் தொலைக்காட்சி வரிசையாக படங்களை தயாரித்து வருகிறது. இந்த வரிசையில் லேட்டஸ்ட், ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர் இயக்கும் படம். தனுஷ் படத்தின் ஹீரோ. மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்பது தெரியாத நிலையில் படத்துக்கு போக்கிரி ராஜா என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர்.
படிக்காதவன் படத்தை முடித்த தனுஷ் இது மாலை நேரத்து மயக்கம் படத்தில் நடித்து வருகிறார். அது முடிந்ததும் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம். அதற்குப் பிறகே போக்கிரி ராஜா.
மாமனார் போல ஸ்டைல் காட்டுவீர்களா?