திருமணமாகி செட்டிலான சோனியா அகர்வால் மீண்டும் நடிக்க வருகிறார். நல்ல நடிகை, அவர் திறமையை பார்த்து ரசிப்பதற்குள் ரிட்டையர்ட் ஆகிவிட்டாரே என்று வருத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு.
திருமணமான நடிகைகளை வெல்கம் போர்ட் வைத்து அழைக்கும் தொலைக்காட்சி மெகா சீரியல்தான் சோனியாவுக்கும் மறுவாழ்வு அளித்திருக்கிறது. அவர் நடிக்கயிருப்பது குஷ்பு தயாரிக்கும் மெகா சீரியலில்.
சிம்ரனைப் போல் டி.வி.யிலிருந்து பெரிய திரைக்கு சோனியாவும் ஷிப்ட் ஆவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.