பாடலாசிரியர் யுரேகா இயக்கும் படம் மதுரை சம்பவம். தூத்துக்குடி ஹரிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். மதுரையை மையமாகக் கொண்டு தயாராகும் இந்தப் படத்தில் இரண்டு ஹீரோயின்கள்.
அனுயா ஹரிகுமார் ஜோடியாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினாக நடிக்க கார்த்திகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். தூத்துக்குடி படத்தில் ஹரிகுமார் ஜோடியாக அறிமுகமானவர் கார்த்திகா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக கார்த்திகா நேற்று தெரிவித்தார். இந்தப் படம் தவிர கார்த்திகா வைதேகி, தைரியம் படங்களில் நடித்து வருகிறார். இதில் வைதேகி இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் என்பது குறிப்பிடத்தக்கது.