Publish Date: Tue, 06 Jan 2009 (20:23 IST)
Updated Date: Mon, 01 Dec 2008 (14:23 IST)
நிஜ வில்லன் மாதிரி அனைவரையும் பயமுறுத்தி வருகிறார், பிரகாஷ்ராஜ். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடிப்பதால் மனிதர் எங்கு பதுங்கியிருக்கிறார் என்று கண்டுபிடிக்க தனி புலனாய்வு படையே தேவைப்படுகிறது. இவரால் விழிபிதுங்கிப் போனவர்கள் ஏராளம். விஜயும் இந்த லிஸ்டில் இருப்பதுதான் பரிதாபம்.
வில்லு படத்தில் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்து வருகிறார். திருச்செந்தூரில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை எடுப்பதற்காக விஜய் சகிதம் கிளம்பி போயிருக்கிறார்கள். கதாநாயகன் மட்டும் இருந்தால் போதாதே. வில்லனும் வேண்டுமே. பத்து நாள் காத்திருந்தும் கிடைக்கவில்லையாம் வில்லனின் தரிசனம்.
கடுப்பாகிப் போன யூனிட் கையை பிசைந்து கொண்டிருக்க, பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய முடியுமா என்ற கவலையில் இருக்கிறதாம் தயாரிப்பாளர் தரப்பு.