Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சி.மோகன் - சினிமாவுக்கு வரும் இலக்கியவாதி!

சி.மோகன் - சினிமாவுக்கு வரும் இலக்கியவாதி!
, புதன், 7 ஜனவரி 2009 (22:35 IST)
சி. மேகன்.. இலக்கிய வட்டாரத்தில் பிரபலமான பெயர். சிறுகதை, விமர்சனம், கவிதமோகன் என பன்முக ஆளுமை கொண்டவர். இவரது கி‌‌ரீடத்தில் இன்னொரு இறகு விரைவில் இணையப் போகிறது. ஆம், சினிமாவுக்கு வரப் போகிறார் இந்த சீ‌ரியஸ் இலக்கியவாதி.

சி. மோகன் ஆரம்ப காலத்தில் விழிகள் என்ற பத்தி‌ரிகையை தனது நண்பர்களுடன் இணைந்து நடத்தியிருக்கிறார். க்‌ரியா பதிப்பகத்தில் இவர் பணியாற்றிய போது உலக இலக்கியங்கள் பல தமிழில் வெளிவர காரணமாக இருந்துள்ளார். சிறந்த மொ‌ழி பெயர்ப்பாளர். ஜெர்மன் எழுத்தாளர் பிரான்ஸ் காஃப்காவின் புகழபெற்ற தீர்ப்பு கதையை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

சி. மேகன் சிறந்த சிறுகதை எழுத்தாளர். இவரது கதைகள் ரகசிய வேட்கை என்ற பெய‌ரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. இவரது கவிதைத் தொகுப்பு தண்ணீர் சிற்பம். காலம் கலை கலைஞன் என்ற இவரது கட்டுரைத் தொகுப்பு தமிழின் முக்கியமான விமர்சன புத்தகங்களில் ஒன்று.

வயல் என்ற தனது பதிப்பகத்தின் மூலம் தி. ஜானகிராமனின் கதைகைளை புத்தகமாக கொண்டுவந்துள்ளார். சிறந்த பதிப்பகத்துக்காக ஜெர்மனியில் வழங்கப்படும் விருதை இவர் பெற்றிருப்பது தனிச்சிறப்பு.

நுண் கலைகள் மீதான இவரது விமர்சனத்துடன் கூடிய அணுகுமுறை குறிப்பிடத்தகுந்தது. நுண் கலைகளை பிரதானப்படுத்தி புனைகளம் என்ற புத்தகத்தை தொடர்ந்து கொண்டு வருகிறார்.

மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் புகழ்பெற்ற ஜெ ஜெ சில குறிப்புகள் நாவலை எடிட் செய்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல இலக்கியவாதிகளுக்கு ஆதர்சமாக விளங்கும் இவர் இகோர் இயக்கும் ஆறுவது சினம் படத்துக்கு வசனம் எழுதுகிறார். ஆர்யா, ஸ்ரேயா நடிக்கும் இந்தப் படத்தை ஜ‌ி.வி. பிலிம்ஸ் தயா‌ரிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil