Publish Date: Wed, 07 Jan 2009 (22:35 IST)
Updated Date: Sat, 29 Nov 2008 (16:34 IST)
சேவல், ஆறுமுகம், திருத்தணி. இந்த மூன்றும் பரத் நடித்த, நடிக்கிற, நடிக்கப் போகிற படங்களின் பெயர்கள். இந்த மூன்றுமே தமிழ் கடவுள் முருகன் சம்பந்தப்பட்ட பெயர்கள். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் படம், ராஜா ராணி.
இந்தியில் ஷாகித் கபூர், கரீனா கபூர் நடிப்பில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றிபெற்ற ஜப் வி மெட் படத்தை தமிழில் ரீ-மேக் செய்கிறது மேசர் பேர் நிறுவனம்.
இதில் ஷாகித் நடித்த வேடத்தில் பரத்தும், கரீனா நடித்த வேடத்தில் தமன்னாவும் நடிக்கின்றனர். ஜெயம் கொண்டான் படத்தை இயக்கிய ஆர். கண்ணன் படத்தை இயக்குகிறார். படத்துக்கு ராஜா ராணி என பெயர் வைத்துள்ளனர்.
ஆறுமுகம் படத்தில் நடித்துவரும் பரத் அடுத்து பேரரசு இயக்கத்தில் திருத்தணி படத்தில் நடிக்கிறார். திருத்தணிக்குப் பிறகு ராஜா ராணிக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.