Publish Date: Wed, 07 Jan 2009 (22:34 IST)
Updated Date: Sat, 29 Nov 2008 (16:15 IST)
முதல் படம் கருப்பசாமி குத்தகைதாரரில் இழுத்துப் போர்த்தி நடித்தார் மீனாட்சி. இப்படியே நடித்தால் கட்டம் கட்டி விடுவார்கள் என நலம்விரும்பிகள் எச்சரித்ததை தொடர்ந்து, கவர்ச்சிக்கான எல்லையை ஒரேயடியாக அழிக்க, மீனாட்சி காட்டில் அடைமழை.
தற்போது அம்மணி கைவசம் நான்கு படங்கள். இது தவிர அரைடஜன் படங்களுக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கால்ஷீட் பற்றி கவலைப்படாமல் அட்வான்ஸாக வாங்கி குவிப்பவர், ஒத்தை பாடல் வாய்ப்பையும் தப்ப விடுவதில்லை.
முன்னணி நடிகைகள் ஒரு பாடலுக்கு ஆடுவதில்லை என முடிவெடுத்தபின் ஒரு பாடலுக்கு ஆட நடிகைகளுக்கு கடும் பஞ்சம். இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் மீனாட்சி ஒரு பாடலுக்கு ஒரு படத்துக்கான வசூலை கறந்து விடுகிறாராம்.
சிம்புவின் சிலம்பாட்டத்தைத் தொடர்ந்து விஷால் அய்யப்பன் இயக்கத்தில் நடிக்கும் தோரணம் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட லம்பாக ஒரு அமௌண்ட் வாங்கியிருக்கிறார் மீனாட்சி. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளத் தெரிந்தவர்.