செக்ஸ் டார்ச்சர் தருகிறார் தயாரிப்பாளர் என்று கூறி பாதி படப்பிடிப்பில் மாளவிகா ஓடிப்போனாரே... அந்தப் படம் - கார்த்தீகை - பொங்கலுக்கு வெளியாகிறது.
விக்ரமாதித்யா, சமிக்சா, மாளவிகாவை வைத்து தொடங்கப்பட்ட இப்படம் மாளவிகாவின் திடீர் விலகலைத் தொடர்ந்து சிறிது நாட்கள் படப்பிடிப்பு தள்ளிப் போனது.
கர்ப்பமாக இருந்த மாளவிகா, குழந்தை பிறந்த பிறகு வேண்டுமானால் படத்தில் நடிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். அதுவரை காத்திருக்க முடியாது என்பதால் நிஷா கோத்தாரி மாளவிகாவுக்குப் பதில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இப்போது படம் முடிந்துவிட்டது. பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்மிட்டுள்ளனர். சுவாரஸியம் என்னவென்றால், படம் வெளியாகும் முன் மாளவிகா முந்திக் கொண்டுவிட்டார். ஆமாம், மாளவிகாவுக்கு செவ்வாய்கிழமை குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தை.
தை பிறக்கும் முன்பே மாளவிகாவுக்கு மகிழ்ச்சி பிறந்துள்ளது.