நான்கு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அனைத்து படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சிம்புவின் சிலம்பாட்டம், கே.டி. குஞ்சுமோனின் காதலுக்கு மரணமில்லை, லாரன்சின் ராஜாதி ராஜா, சத்யராஜின் சங்கமித்ரா, புதுமுகங்களின் ஓடும் மேகங்களே என பாதிக்கப்பட்ட படங்களின் பட்டியல் தொடர்கிறது.
வடபழனியில் எந்திரன் படத்துக்காக போடப்பட்ட அரங்குகள் மழையால் சேதமடைந்ததால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் தி. நகரிலுள்ள பிரசாந்தின் கோல்டு ஹவுஸில் எந்திரன் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டிருந்தார். பலத்த மழை காரணமாக அதுவும் ரத்து செய்யப்பட்டது.
வடபழனி மற்றும் சாலிகிராமத்தில் உள்ள பல ஸ்டுடியோக்கள் நீரால் சூழ்ந்துள்ளதால் சினிமா படப்பிடிப்பு மட்டுமின்றி தொலைக்காட்சி படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.