Publish Date: Wed, 07 Jan 2009 (22:30 IST)
Updated Date: Sat, 29 Nov 2008 (14:33 IST)
ஷில்பா ஷெட்டிக்கு தமிழ்ப் படம் புதிதல்ல. பிரபு தேவாவுடன் ஒரு படத்தில் நடித்திருக்கும் இவர், குஷி படத்தில் ஒரு பாடலுக்கும் ஆடியிருக்கிறார்.
ஆனால் அது அந்தக் காலம். அவர் இந்திய அளவில் மட்டும் பாப்புலராக இருந்த போது. இப்போது உலக அளவில் பாப்புலர் பிகராகிவிட்டார் ஷில்பா. ஒரு பாடலுக்கு ஆட அழைத்தால் வருவாரா?
வருவார் என்ற நம்பிக்கையுடன் அழைத்திருக்கிறார், இயக்குனர் சரண். இவர் எழுதி இயக்கும் மோதி விளையாடு படத்தில் வினயும், காஜல் அகர்வாலும் நடித்து வருகின்றனர். ஆக்சன் படமான இதனை மிகுந்த பொருட்செலவில் எடுத்து வருகிறார், சரண்.
இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட ஷில்பா ஷெட்டியிடம் கால்ஷீட் கேட்டுள்ளனர். டேனியல் க்ரெய்க்கிடம் பாராட்டு பெற்ற ஷில்பா அடுத்த பாண்ட் படத்தில் கண்டிப்பாக நடிப்பார் என்ற செய்தி உலாவரும் வேளையில், ஒரு பாடலுக்கு ஆட வருவாரா என பலருக்கு சந்தேகம்.
வருவர் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் சரண்.