Publish Date: Wed, 07 Jan 2009 (22:29 IST)
Updated Date: Sat, 29 Nov 2008 (16:36 IST)
சினேகாவின் பவானி திரைக்கு வர ரொம்ப நாளாகும். அதுவரை அவரது ரசிகர்களை காத்திருக்க வைக்காமல் சினேகா நடித்த தெலுங்கு படம் ஒன்றை டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.
ஜெயம் படத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் தெலுங்கில் முன்னணி ஹீரோ. அவருடன் சினேகா நடித்த படமொன்றை ஹரி என்ற பெயரில் டப் செய்து வெளியிடுகிறது, டீம் 10 கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம்.
சினேகாவின் அக்காவை சிலர் மானபங்கப்படுத்துவதும், ஹீரோ கோபிசந்த் சினேகாவுக்கு உதவுவதும்தான் படத்தின் கதை. ஆக்சன் படமான இதற்கு சதாசிவமூர்த்தி வசனம் எழுதுகிறார்.