Publish Date: Wed, 07 Jan 2009 (22:28 IST)
Updated Date: Sat, 29 Nov 2008 (16:37 IST)
லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் கார்த்தியை வைத்து படம் இயக்குகிறார். கார்த்தி ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்க வேண்டிய படப்பிடிப்பு கார்த்தி நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் முடியாததால் அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்துக்கு குதிரை என்ற பெயரை தேர்வு செய்திருந்தார் லிங்குசாமி. இதே பெயரை இயக்குனர் ரமணா ஹீரோவாக அறிமுகமாகும் படத்துக்கு வைத்துள்ளதால், தனது படத்தின் பெயரை பையா என மாற்றியுள்ளார் லிங்குசாமி.
ஆர். மதி படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசை யுவன் ஷங்கர் ராஜா.