Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெற்றோரை போற்றும் நேசி!

Advertiesment
நேசி விகாஷ் இயக்குனர் சரவண கிருஷ்ணா
, புதன், 7 ஜனவரி 2009 (22:24 IST)
மாடல்கள்தான் உடல் எடையை குறைக்கிறேன் என்று பட்டினி கிடந்து உடம்பை கெடுத்துக் கொள்வார்கள். இந்த கெட்டப் பழக்கம் இப்போது தமிழ் சினிமாவையும் ஆக்கிரமித்துள்ளது.

வாரணம் ஆயிரம் படத்துக்காக ஆறு மாதம் வெறும் இலதழைகளை மடடுமே சாப்பிட்டு பதினேழு வயது பையனாக மாறினார் சூர்யா. விக்ரம் ஒவ்வொரு படத்துக்கும் உடம்பை மெட்டலாக நீட்டியும் குறைத்தும் வருகிறார்.

பிரபல நடிகர்களின் இந்த டெடிகேஷன் சின்ன நடிகர்களிடமும் பரவி வருகிறது. நேசி படத்தில் நடிக்கும் விகாஷ் சில காட்சிகளில் மெலிந்து தெ‌ரிய வேண்டும் என்தற்காக டயட்டில் இருந்துள்ளார். மருத்துவ‌ரின் ஆலோசனையில்லாமல் அவராகவே பட்டினி கிடந்ததால், படப்பிடிப்பில் மயங்கி விழுந்திருக்‌கிறார்.

விகாஷ் ஜோடியாக புதுமுகம் சோனியா நடிக்கும் இந்தப் படம் பெற்றோர்களை நேசிக்க வேண்டும் என்ற கருத்தை மையமாகக் கொண்டு தயாராகியுள்ளது.

இதுபற்றி கூறிய படத்தின் இயக்குனர் சரவண கிருஷ்ணா, காதலியை நேசிப்பது மட்டும்தான் இளைஞர்களின் வேலை என்பது போலதான் இப்போது படங்கள் வருகின்றன. பெற்றவர்களை நேசிப்பதும் அவர்கள் கடமை என்பதை வலியுறுத்தி நேசி படத்தை எடுத்திருக்கிறோம் என்றார்.

படத்தை ரசிகர்கள் நேசிப்பது போல் எடுத்திருந்தால் ச‌ரிதான்.

Share this Story:

Follow Webdunia tamil