Publish Date: Wed, 07 Jan 2009 (22:22 IST)
Updated Date: Thu, 27 Nov 2008 (15:05 IST)
தொடர் மழை காரணமாக நாளை வெளியாவதாக இருந்த படங்களின் ரிலீஸ் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பெய்துவரும் கன மழை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களும் இயங்கவில்லை. மழை காரணமாக திரையரங்குகளுக்கு வருகிறவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது.
நாளை (28) மூன்று படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மகேஷ் சரண்யா மற்றும் பலர், எல்லாம் அவன் செயல், பூ ஆகிய மூன்று படங்களில் எல்லாம் அவன் செயல் படத்தின் ரிலீஸை 29 ஆம் தேதிக்கு தள்ளிவைக்க முடிவு செய்துள்ளனர். மழை தொடர்ந்தால் மேலும் சில நாட்கள் தள்ளிப் போனாலும் ஆச்சரியமில்லை என்கின்றனர் தயாரிப்பு தரப்பில்.
மற்ற இரு படங்கள் வெளியாவதும் சந்தேகமே என்கின்றன தகவல்கள். திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வராத நிலையில் படத்தை வெளியிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதால் இந்த நடவடிக்கையை தயாரிப்பாளர்கள் எடுத்து உள்ளனர்.
ஏற்கனவே வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படங்களின் வசூலும் மழை காரணமாக கணிசமான அளவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.