Publish Date: Wed, 07 Jan 2009 (22:21 IST)
Updated Date: Thu, 27 Nov 2008 (15:04 IST)
எங்கே இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்த ஸ்ரீதேவிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துக் கொண்டிருக்கும் தமிழ்ப் படம், சரித்திரம். சாமி இயக்கும் இந்தப் படத்தில் மிருகம் ஆதிக்கு இவர்தான் ஜோடி.
சிலம்பக் கலையை மையமாக வைத்து உருவாகிவரும் இந்தப் படத்தில் சிலம்பம் சுற்றும் பெண்ணாக நடித்து வருகிறார் ஸ்ரீதேவிகா. சிலம்பம் சொல்லிக் கொடுக்கும் வாத்தியாராக ராஜ்கிரணும், அவரது மாணவர்களாக ஆதி, கலாபவன் மணி மற்றும் சண்முகராஜன் நடிக்கின்றனர்.
இந்தப் படம் தனக்கு விருதை பெற்றுத்தரும் என்பது ஸ்ரீதேவிகாவின் நம்பிக்கை. இந்த திடீர் நம்பிக்கைக்கு காரணம் இல்லாமல் இல்லை. வருடம்தோறும் துபாய் மலையாளிகள் சார்பில் சிறந்த திரைக்கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். சென்ற வருடத்தின் சிறந்த நடிகைக்கான சென்சேஷனல் விருது ஸ்ரீதேவிகாவுக்கு கிடைத்தது.
இந்த தன்னம்பிக்கைதான் சரித்திரத்தில் நடித்ததற்கு விருது கிடைக்கும் என ஸ்ரீதேவிகாவை பேச வைத்துள்ளது.