Publish Date: Wed, 07 Jan 2009 (22:20 IST)
Updated Date: Thu, 27 Nov 2008 (15:02 IST)
சிபியின் துணிச்சலுக்கு ராயல் சல்யூட் அடித்தே ஆகவேண்டும். ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் போதே வில்லனாக நடிக்க சன் ஆஃப் சத்யராஜால் மட்டுமே முடியும்.
எஸ்.பி.பி. சரண் தயாரிப்பில் வெங்கட்பிரபுவின் அசிஸ்டெண்ட் இயக்கும் படம் நாணயம். முன்பு பரமபதம் என பெயரிடப்பட்டிருந்த இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் பிரசன்னா. ஆன்ட்டி ஹீரோவாக நடிப்பது சிபி.
சமீபத்தில் இதன் போட்டோசெஷன் சென்னையில் நடந்தது. பிரசன்னாவுடன் அவரது ஜோடியாக நடிக்கும் கீர்த்தி குலாரி, யாஸ்மின் இருவரும் கலந்து கொண்டனர். சிபி வில்லன் என்பதாலா தெரியவில்லை, போடடோசெஷனில் அவர் கலந்து கொள்ளவில்லை.
படத்தில் இவருக்கு ஜோடியும் கிடையாது என்பது கூடுதல் தகவல்.