Publish Date: Wed, 07 Jan 2009 (22:19 IST)
Updated Date: Wed, 26 Nov 2008 (17:29 IST)
யுவன் ஷங்கர் ராஜாவை முதன் முறையாக திரையில் நடிக்க வைத்தவர் இயக்குனர் எஸ்.டி.சபா. இவரின் புன்னகைப் பூவே படத்தில் ஒரு பாடலுக்கு ராக் இசைக் கலைஞர்களைப் போல் பாடிக் கொண்டே ஆடினார் யுவன்.
இப்போது யுவனின் முறை. தான் புதிதாக தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை இயக்கும் வாய்ப்பை சபாவுக்கு வழங்கியிருக்கிறார்.
அஆஇஈ, மா, 16 என ஒரே நேரத்தில் மூன்று படங்களை இயக்கி வரும் சபா, இந்த மூன்று படங்களும் முடிந்த பிறகு யுவன் படத்தை இயக்குகிறார்.
படப்பிடிப்பு அடுத்த வருடம் தான் ஆரம்பமாகும் என்றாலும், தொழில் நுட்பக் கலைஞர்களை ஒப்பந்தம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.