Publish Date: Wed, 07 Jan 2009 (22:19 IST)
Updated Date: Wed, 26 Nov 2008 (17:28 IST)
எட்டு இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் மாயாண்டி குடும்பத்தாரின் படப்பிடிப்பு டிசம்பர் எட்டாம் தேதி தொடங்குகிறது.
பிரசாந்த், ரம்பா நடித்த சூப்பர் குட் பிலிம்ஸின் பூ மகள் ஊர்வலம் படம் மூலம் இயக்குனரானவர் மதுரவன். பல வருடங்களுக்குப் பிறகு ராசு மதுரவன் என பெயரை மாற்றி இவர் இயக்கிய படம் பாண்டி.
இத்தேஷ் ஜெபக் தயாரித்த இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் இயக்கும் படம், மாயாண்டி குடும்பத்தார். எட்டு இயக்குனர்கள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். இந்த எண்ணிக்கை படம் முடியும்போது பத்தாக உயரவும் வாய்ப்புள்ளதாம்.
மாயாண்டி குடும்பத்தாரை அண்ணாமலை பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. இப்போது கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று தயாரிக்கிறது.
தேவர் குடும்பத்து பழக்க வழக்கங்கள், அந்த சமூகத்தின் கலாச்சாரம் இவற்றை பிரதிபலிப்பதாக இருக்குமாம்.