ஒருவரின் நஷ்டம் இன்னொருவரின் லாபம் என்பது எவ்வளவு சரி. கமலின் மர்மயோகி படப்பிடிப்பு தள்ளிப் போனதால் விஷாலின் நீண்டநாள் ஆசை நிறைவேறியிருக்கிறது.
நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்த விஷாலுக்கு த்ரிஷாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. கால்ஷீட்டை காரணம்காட்டி விஷாலின் அழைப்பை ஒவ்வொரு முறையும் தட்டிக் கழித்து வந்தார் த்ரிஷா. செல்வராகவன் இயக்கத்தில் விஷால் நடிக்கயிருக்கும் படத்துக்கு கால்ஷீட் கேட்ட போதும் பிஸி பதில்தான் கிடைத்தது.
இந்நிலையில் மர்மயோகி படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போக அந்த கால்ஷீட்டை யாருக்கேனும் கொடுத்தாக வேண்டிய சூழல். விளைவு...பிஸி என்று மறுத்த விஷால் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் த்ரிஷா. அடுத்த வருடம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.