Publish Date: Wed, 07 Jan 2009 (22:15 IST)
Updated Date: Wed, 26 Nov 2008 (17:29 IST)
வாழ்த்துகள், தூண்டில் படங்களில் நடித்திருக்கும் ஆர்கே கதாநாயகனாக அறிமுகமாகும் படம் எல்லாம் அவன் செயல். ஷாஜி கைலாஸ் இயக்கியிருக்கும் இந்தப் படம் 28 ஆம் தேதி வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து அழகர்மலை படத்தில் நடிக்கிறார் ஆர்கே. காதலுக்கு மரியாதைக்குப் பிறகு படத்தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த சங்கிலி முருகன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். படத்துக்கு இசை இளையராஜh.
சங்கிலி முருகன், இளையராஜா கூட்டணியின் காதலுக்கு மரியாதை பாடல்கள் சூப்பர்ஹிட்டானதால் அதேபோலொரு ஹிட் அழகர்மலைக்கும் அமைய வேண்டும் எனபதில் உறுதியாக இருக்கிறாராம், இளையராஜா.
இசைஞானியின் முடிவு அவரது ரசிகர்களுக்கு பெரும் விருந்து என்பதில் சந்தேகமில்லை.