Publish Date: Wed, 07 Jan 2009 (22:14 IST)
Updated Date: Tue, 25 Nov 2008 (13:42 IST)
மதுரையை மையமாக வைத்து வெளிவரும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செல்வராகவனின் அசிஸ்டெண்ட் சிவகுமார் இயக்கும் பூக்கடை ரவி படத்தின் கதையும் மதுரையை மையமாகக் கொண்டே எழுதப்பட்டிருக்கிறது.
சன் பிக்சர்ஸ் ரேடான் மூலம் நேரடியாக தயாரிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நரேன் இதில் நாயகனாக நடிக்கிறார்.
மதுரையில் நடக்கும் காட்சிகளை எடுத்து முடித்தவர்கள் இன்று முதல் சென்னையில் படப்பிடிப்பு நடத்துகின்றனர். படத்தின் முதல் பகுதி மதுரையிலும், பிற்பகுதி சென்னையிலும் நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஸ்ரீனிவாஸ ரெட்டி படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Webdunia
Publish Date: Wed, 07 Jan 2009 (22:14 IST)
Updated Date: Tue, 25 Nov 2008 (13:42 IST)