Publish Date: Wed, 07 Jan 2009 (22:12 IST)
Updated Date: Tue, 25 Nov 2008 (13:34 IST)
மதுரையை மையமாக வைத்து தயாராகும் மற்றுமொரு படம் மதுரை சம்பவம். சுப்ரமணியபுரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு மதுரை மீதான திரையுலகின் பிரேமை கூடியிருக்கிறது. அதன் எதிரொலிதான் மதுரை சம்பவம்.
தூத்துக்குடி உள்ளிட்ட படங்களில் நடித்த ஹரி குமார் மதுரை சம்பவத்தில் ஹீரோவாக நடிக்கிறார். பாடலாசிரியர் யுரேகா படத்தை இயக்குகிறார். படத்தில் மொத்தம் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் அனுயா. இன்னொருவர்?
இந்த கேள்விக்கான பதிலை சின்சியராக தேடிக் கொண்டிருக்கின்றனர் படப்பிடிப்பு குழுவினர். ஹரி குமாரின் முதல் படம் தூத்துக்குடியில் நடித்த கார்த்திகா அனேகாமாக நடிக்கலாம் என்பது இறுதியாக கிடைத்த தகவல்.
யுரேகா இயக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுமுகங்களின் இந்தப் படத்துக்கு மெகா பட்ஜெட் படங்களுக்குரிய எதிர்பார்ப்பு உள்ளது.