இதோ அதோ என இழுத்தடித்த ரெட்டைச்சுழி படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 3 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
பாரதிராஜா, பாலசந்தர் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தை தாமிரா இயக்குகிறார். ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது. இசை கார்த்திக் ராஜா. மூன்று பாடல்கள் கம்போஸான நிலையில் சிகரம், இமயம் இருவரும் கால்ஷீட்டை தள்ளிப் போட்டதால் படப்பிடிப்பும் தள்ளிப் போனது. உடல்நிலை சரியில்லாததால் பாலசந்தர் நடிப்பது சந்தேகம் என்கின்றன தகவல்கள்.
படத்தில் குழந்தைகள் போர்ஷனை எடுப்பதற்காக டிசம்பர் 3 ரெட்டைச்சுழி யூனிட் திருநெல்வேலி செல்கிறது. பாரதிராஜா, பாலசந்தர் சம்பந்தப்பட்ட காட்சிகள் பிறகு எடுக்கப்படும்.