Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சத்யராஜின் லைஃப் டைம் படம்!

Advertiesment
சத்யராஜின் லைஃப் டைம் படம்!
, புதன், 7 ஜனவரி 2009 (22:09 IST)
ரஜினிக்கு ஆறிலிருந்து அறுபதவரை என்றால் சத்யராஜுக்கு சங்கமித்ரா. ஒரு மனிதனின் 16 வயது முதல் 65 வயது வரையான வாழ்க்கையை சொல்லும் படம்தான் சங்கமித்ரா.

16வது வயதில் ஒரு பெண்ணுக்கு செய்யும் துரோகம் அப்பெண்ணின் குடும்பத்தை பாதிக்கிறது. அதற்கு பரிகாரமாக அக்குடும்பத்துக்கு எல்லா வகையிலும் உதவியாக இருக்கிறான் துரோகம் இழைத்த அம்மனிதன். அவனது வாழ்க்கைதான் படம்.

இந்த வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். 25 வயது வேடத்திலும் அவரே நடிப்பதால் அதற்கேற்ப உடல் எடையை குறைக்கப் போகிறாராம். 65 வயது கிழவராகவும் இவரே நடிக்கிறார்.

தனது லைஃப் டைம் படமாக சங்கமித்ரா இருக்கும் என்பது சத்யராஜின் நம்பிக்கை.

Share this Story:

Follow Webdunia tamil