Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருநெல்வேலியில் பவானி!

திருநெல்வேலியில் பவானி!
, புதன், 7 ஜனவரி 2009 (22:08 IST)
சினேகா நடிக்கும் பவானி படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியின் ஜனநடமாட்டம் மிகுந்த பகுதிகளில் நடைபெற்றது.

விஜயசாந்தி நடித்த வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தின் ரீ-மேக்கான இந்தப் படத்தில் விஜயசாந்தி நடித்த போலீஸ் அதிகாரி வேடத்தில் சினேகா நடித்து வருகிறார். ஆர்த்திகுமார் படத்தை இயக்குகிறார். ராஜ்கபூர் போலீஸாக நடிக்கிறார். வில்லனாக நடிப்பது கோட்டா ஸ்ரீனிவாசன்.

இதன் படப்பிடிப்பு நெல்லையின் சந்தடி மிகுந்த பகுதிகளில் நடந்தது. படம் லைவ்வாக வரவேண்டும் என்பதற்காக அரங்கு அமைக்காமல் நிஜமான இடங்களில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

இந்தப் படத்துக்காக போலீஸ் அதிகாரிகள் சிலரிடம் போலீஸ் மேனரிசங்கள் குறித்து படிக்கவும் திட்டமிட்டுள்ளாராம் சினேகா.

Share this Story:

Follow Webdunia tamil