Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குறும் படங்களுக்காக ஒரு இணையதளம்

Advertiesment
குறும் படங்களுக்காக ஒரு இணையதளம்
இந்தியாவிலேயே அதிக குறும் படம், ஆவணப் படம் தயாராகும் மாநிலம் தமிழகம். அதே நேரம் இந்தப் படங்களை பற்றிய விவரங்களை ஒருவர் தெ‌ரிந்து கொள்ள ச‌ரியான ஆவணங்களோ, ஊடகமேஇல்லை. இந்த குறையை நீக்கும் விதமாக நேற்று தமிழ்ஸ்டுடியோ டாட் காம் என்ற இணையதளம் தொடங்கப்பட்டது.

அருள், குணா என்ற இரு சாப்ட்வேர் இன்‌ஜினியர்கள் இந்த இணையதளத்தை தொடங்கியிருக்கிறார்கள். குறும் படம், ஆவணப் படம் ஆகியவை குறித்த அனைத்து தகவல்கள் அடங்கியதாக இந்த இணையதளம் இருக்கும். குறும் படம், ஆவணப் படங்களை எப்படி உலக திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவது, அதனை மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என்பது பற்றிய தகவல்களையும் இந்த இணையதளத்தில் ஒருவர் தெ‌ரிந்து கொள்ளலாம்.

குறும் படம், ஆவணப் படம் குறித்த கருத்தரங்கும் மாதாமாதம் நடைபெறும் என்று நம்மிடம் தெ‌ரிவித்தார், இணையதளத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான அருள்.

நேற்று நடந்த விழாவில் இயக்குனர் ஞானராஜசேகரன் இணையதளத்தை தொடங்கி வைத்தார். அவர் பேசம் போது, சினிமாவுக்கு மாற்றாக குறும்பட, ஆவணப்பட இயக்கத்தை வளர்த்து எடுக்க வேண்டும் என்றார். தலைமை உரை ஆற்றிய இயக்குனரும் எடிட்டருமான பி.லெனின், நாக் அவுட் குறும் படத்தை எடுத்த போது என்னென்ன எதிர்ப்புகளை சந்தித்தார் என்பதை தனது பேச்சில் குறிப்பிட்டார்.;

விழாவில் நிழல் ஆசி‌ரியர் திருநாவுக்கரசு கலந்து கொண்டு, குறும் மற்றும் ஆவணப்படங்களை எப்படி வியாபார‌ரீதியாக லாபம் உடையதாக மாற்றுவது என்பது குறித்து விளக்கமளித்தார்.

தமிழக குறும்பட, ஆவணப்பட வளர்ச்சிக்கு இந்த இணையதளம் உதவினால் அதுவும் நல்லதுதானே.

Share this Story:

Follow Webdunia tamil