விஜய், அஜித் ஏன் ரஜினி படத்துக்கு அழைத்துமே தமிழில் நடிக்க மறுத்த இலியானா ஷாம் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
கேடி படத்தில் அறிமுகமான தன்னை தமிழ்ப் படவுலகம் சரியாக மரியாதை செய்யவில்லை என இலியானாவுக்கு கோபம். இதனால் தெலுங்குக்கு சென்றவர், அங்கு முன்னணியில் இருந்த த்ரிஷாவை பின்னக்கு தள்ளி முதலிடத்துக்கு உயர்ந்தார். தெலுங்குக்கு அவர் சென்ற பிறகே நம்மவர்களுக்கு இலியானாவின் அழகும், திறமையும் தெரிய வந்தது.
விஜய்யின் ஒவ்வொரு படத்தின் போதும் தவறாமல் இலியானாவுக்கு அழைப்பு செல்லும். அவரும் தவறாமல், கால்ஷீட் பிஸி என்று பதிலளிப்பார். ரஜினியின் சுல்தான் தி வாரியர் படத்தில் இலியானா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சௌந்தர்யா சம்பளத்தை ஏகத்துக்கும் குறைத்ததால் அந்த ப்ராஜெக்டில் இருந்தும் கழன்று கொண்டார் இலியானா.
இந்நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கும் படத்தில் ஷா ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் இலியானா. இந்தப் படம் தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் தயாராகிறது. போலீஸ் அதிகாரியாக இதில் நடிக்கிறார் ஷாம்.