பாடல் காட்சிகளுக்கு வெளிநாடு சென்று வந்த நம்மவர்களின் கவனம் வெளிநாட்டு சண்டைக் கலைஞர்களின் மீது விழுந்திருக்கிறது. பட்ஜெட் படங்களுக்கும் வெளிநாட்டு ஸ்டண்ட் மாஸ்டர்களை பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது.
தசாவதாரம், சத்யம் படங்களில் வெளிநாட்டு ஸ்டண்ட் மாஸ்டர்கள் பணிபுரிந்தனர். தற்போது தயாராகி வரும் அயன், எந்திரன், கந்தசாமி படங்களிலும் வெளிநாடுகளை சேர்ந்த மாஸ்டர்களே பணிபுரிகின்றனர்.
இந்த வரிசையில் அறிமுக நடிகர்களின் உதிரம் படமும் இணைகிறது. பாடல்கள் இல்லாத இந்தப் படத்திற்காக சமீபத்தில் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். சண்டைக் காட்சிகளை பிரமாண்டமாக எடுப்பதற்குதான் இந்த பயணம். ஹாலிவுட் பாணியில் பாடல், காதல் எதுவுமின்றி தயாராகும் இந்த க்ரைம் த்ரில்லரில் சண்டைக் காட்சிகளை அமைத்தவர் கொரியாவை சேர்ந்த சண்டைக் கலைஞராம்.
இந்த வித்தியாசமான படத்தை இயக்கியிருப்பவின் பெயர் சங்கராம்.
அதுதான் இந்த பிரமாண்டம்.