Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிக்க மாட்டேன் - காவ்யா மாதவன்

Advertiesment
நடிக்க மாட்டேன் - காவ்யா மாதவன்
மலையாள நடிகைகளுக்கும் தமிழ் நடிகைகளுக்கும் உள்ள பிரதான வித்தியாசம், திருமணம். திருமணத்திற்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று சொல்லும் தமிழ் நடிகைகள் சிறிய கால அவகாசத்துக்குப் பிறகு மீண்டும் அ‌ரிதாரம் பூச வந்துவிடுவார்கள். மலையாள நடிகைகள் அப்படியில்லை.

மஞ்சு வா‌ரியார், கோபிகா போன்றவர்கள் திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டவர்கள்தான. பிறகு அந்தப் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. இந்த வ‌ரிசையில் இணையப்போகிறார் காவ்யா மாதவன்.

அடுத்த வருடம் வெளிநாட்டுவாழ் இந்தியர் நிஷ்சல் மோகன் என்பவரை திருமணம் செய்ய ‌ிருக்கும் காவ்யா மாதவன் திருமணத்திற்குப் பிறகு நடிக்கப் போவதில்லை என திட்டவட்டமாக தெ‌ரிவித்துள்ளார்.

தமிழில் இவர் கடைசியாக நடித்தப் படம் சாது மிரண்டா. நல்ல நடிகைகள் தங்களது திருமண சபதங்களை மறுப‌ரிசீலனை செய்வது திரையுலகுக்கு நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil