நடிகர்கள் தங்கள் பெயரில் பிளாக் தொடங்குவது தவிர்க்க முடியாத சடங்காகி வருகிறது. இந்தி நடிகர்கள் தங்களது பிளாக் வழி கிளப்பிவிடும் சர்ச்சைகள் சுவாரசியமானவை.
அமீர்கான் தனது நாயின் பெயர் ஷாருக் என தனது பிளாக்கில் குறிப்பிட்டது, பெரும் சர்ச்சையை கிளப்பியது. அமீர் மன்னிப்பு கேட்ட பிறகே பிரச்சனை முடிவுக்கு வந்தது. அமீர்கானைப் போல் அமிதாப், இயக்குனர் ராம்கோபால் வர்மா ஆகியோரும் தங்களது பிளாக்கை தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறவர்களில் முக்கியமானவர்கள்.
தமிழில் அசின், விக்ரம் ஆகியோர் தங்களது பெயரில் பிளாக் தொடங்கியுள்ளனர். ஆனால் இருவருமே பிளாக்கை தூசுபடிய வைத்துள்ளதுதான் சோகம்.
இந்நிலையில் நடிகர் விஷால், விஷால்பிளாக் டாட் காம் என்ற பெயரில் புதிய பிளாக் தொடங்கியுள்ளார். மற்றவர்களைப் போல் இவரும் தூசுபடிய விடுவாரா இல்லை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவாரா?
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.