ஷக்தி, சந்தியா, சரண்யா மோகன் நடித்திருக்கும் கூல் புரொடக்ஷனின் மகேஷ் சரண்யா மற்றும் பலர் வருகிற 28 ஆம் தேதி வெளியாகிறது.
காதல் கதையான இதனை வில்லன்களே இல்லாமல் உருவாக்கியிருக்கிறார், இயக்குனர் வி.ரவி. படத்தின் இன்னொரு விசேஷம், கல்லூரி காதல் கதையான இதில் கல்லூரியை ஒரு காட்சியில் கூட காண்பிக்கவில்லையாம்.
படத்தில் தங்கை வேடத்தில் சரண்யா மோகன் நடித்துள்ளார். பரத நாட்டியமாடும் காட்சிக்காகவே அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார் ரவி. சரண்யாவின் நடிப்பைப் பார்த்து அசந்தவர்; அவரது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருப்பதுபோல் மாற்றி அமைத்தாராம்.
நவ. 28 சித.செண்பககுமார் தயாரித்திருக்கும் இப்படம் திரைக்கு வருகிறது.