Publish Date: Wed, 07 Jan 2009 (21:45 IST)
Updated Date: Thu, 20 Nov 2008 (01:07 IST)
ஷங்கரின் எந்திரன் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.
பெரு நாட்டில் பாடல் காட்சியுடன் தொடங்கிய எந்திரனின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடந்தது. 3 ஆம் கட்ட படப்பிடிப்பு வரும் 20 ஆம் தேதி குலுமணாலியில் தொடங்குவதாக கூறப்பட்டது. சில காரணங்களால் குலுமணாலி செல்லும் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எந்திரனில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய் மணிரத்னத்தின் படத்தில் பிஸியாக இருக்கிறார். இதனால் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் சென்னையில் படமாக்கி வருகிறார் ஷங்கர். அடையாறு, திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
சென்னை பிலிம் சிட்டியிலும் அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம் ஷங்கர். ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் படத்திலிருந்து ஃப்ரீ ஆன பிறகே படப்பிடிப்பு குழு குலு மணாலி செல்லும் என தெரிகிறது.