Publish Date: Wed, 07 Jan 2009 (21:44 IST)
Updated Date: Thu, 20 Nov 2008 (01:04 IST)
அப்செட்டில் இருக்கிறார் ஜெய் ஆகாஷ். மதன் படத்தில் நான் நடிக்கவே இல்லை, தேவையில்லாமல் அப்படத்தில் நான் நடிப்பதாக ஜெய் ஆகாஷ் கூறிவருகிறார் என நடிகை சுனேனா கூறியதுதான் அப்செட்டுக்கு காரணம்.
இதுபற்றி ஜெய் ஆகாஷிடம் கேட்டதற்கு, மதன் படத்தில் சுனேனா பதினைந்து நாட்கள் நடித்தார் என்றார். மேலும், இந்தப் படத்துக்காக தமன்னாவுக்கு ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டதாம். தற்போது பிஸியாக இருப்பதால் மதன் படத்திலிருந்து விலகிக் கொண்ட தமன்னா வாங்கிய அட்வான்ஸை தர மறுக்கிறாராம்.
இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் தெரிவித்திருப்பதாக கூறினார் ஜெய் ஆகாஷ்.
தமன்னா விலகிக் கொண்டதால் அவருக்குப் பதில் பார்வதி மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தில் சுனேனா நடிப்பாரா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.