திரையுலகின் இலங்கை தமிழருக்கு ஆதரவான போராட்டம் ஐடி நிறுவனங்களிலும் எதிரொலித்துள்ளது. இன்று ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் இலங்கையில் போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடத்துகின்றனர்.
ஐடி என்றதும் நினைவுக்கு வரும் டைடல் பார்க்கின் எதிரே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. நடிகர் சூர்யாவும், பிரகாஷ்ராஜும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
தங்களுக்கு நேரடி தொடர்பு இல்லாத விஷயம் ஒன்றிற்காக ஐடி துறையினர் ஒன்றிணைவதும், போராட்டம் நடத்துவதும் இதுதான் முதல்முறை எனபது குறிப்பிடத்தக்கது.