அறிமுக இயக்குனர்களுக்குகூட படம் கிடைத்துவிடும். ஆனால் முதல்படத்தில் கோட்டைவிட்டவர்களுக்கு அடுத்து படம் கிடைப்பது குதிரை கொம்பு. முதல் படம் முற்றும் கோணலாகி மீண்டும் உதவி இயக்குனரானவர்கள் கோடம்பாக்கத்தில் நிறையபேர் உண்டு.
அழகிய தமிழ் மகன் படம் சரியாக போகாததால் இயக்குனர் பரதனும் தரணியிடம் மீண்டும் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். நல்லவேளை உடனடியாக இவருக்கு அடுத்தப் படம் கிடைத்திருக்கிறது.
தற்போது ராஜாதிராஜாவில் நடித்துவரும் லாரன்ஸ் அடுத்து நடிக்கயிருக்கும் படங்களில் பரதன் இயக்கும் படமும் ஒன்று. படத்துக்கு ஆரவாரம் என பெயர் வைத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டமா படத்தை எடுங்க சார்.