Publish Date: Wed, 07 Jan 2009 (21:28 IST)
Updated Date: Sat, 15 Nov 2008 (12:15 IST)
பார்வை ஒன்றே போதுமே படத்தை இயக்கிய முரளி கிருஷ்ணா தற்போது பலம் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியிருப்பவர், அடுத்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.
புதுமுகங்களின் பலம் முடிவடைந்து ரிலீசுக்கு காத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து வட்டி என்ற படத்தை இயக்குகிறார் முரளி கிருஷ்ணா. கதை, திரைக்கதை தயார். பாடல் கம்போஸிங்கும் தொடங்கிவிட்டது.
இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து, நடிப்பிலும் கால் பதிக்கிறார். தொடர்ந்து நடிப்பாரா என்பதை வட்டிக்கு கிடைக்கும் வரவேற்பு தீர்மானிக்கும்.