Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெய் ஆகாஷின் மதன்!

Advertiesment
ஜெய் ஆகாஷின் மதன்!
, புதன், 7 ஜனவரி 2009 (21:25 IST)
இயக்குனர்கள் ஒற்றை குதிரை சவாரிக்கே திணறுகிறபோது, நடிகராக இருந்து இயக்குனராகியிருக்கும் ஜெய் ஆகாஷ், ஒரே நேரத்தில் இரட்டை குதிரையில் அலுங்காமல் பயணிப்பது ஆச்சரியம்.

என்னை இயக்கியவர்கள் சரியில்லை. அதனால்தான் தமிழில் எனது படங்கள் வெற்றி பெறவில்லை என்று கூறி, காதலன் காதலி படத்தை இயக்கி நடித்து வருகிறார் ஜெய் ஆகாஷ். இதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, மதன் என்ற படத்தையும் தொடங்கியிருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு, இயக்கம் எல்லாம் அவரே. அத்துடன் மதனின் எடிட்டிங் பொறுப்பையும் ஏற்று, கோடம்பாக்கத்தை கலங்கடித்துள்ளார்.

அனாதையான ஹீரோ, எல்லா சொந்தங்களும் உடைய பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். அவனது வாழ்க்கையில் இரண்டு பெண்கள் குறுக்கிறார்கள். ஒருத்தி ஹீரோவை அடைய தனது எல்லா சொந்தங்களையும் உதவிவிட்டு வர தயாராக இருக்கிறார். இன்னொருத்தி சொந்தங்களின் சம்மதத்துடன் மட்டுமே ஹீரோவை அடைவது என்ற முடிவில் இருக்கிறாள். இதில் யாரை ஹீரோ தேர்வு செய்கிறார் என்பது மதன் படத்தின் கதை.

சுனேனா, ராதிகா மேனன் இருவரும் நாயகிகள். இவர்கள் தவிர சந்தானம், சுமித்ரா, தேவன், ஆர்த்தி ஆகியோரும் நடிக்கிறார்கள். தயாரிப்பு மீடியா பிளாண்ட் நிறுவனம்.

Share this Story:

Follow Webdunia tamil