சர்வம் படத்தில் நடித்துவரும் ஆர்யா, கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.
ஆர்யா நடித்தப் படங்களிலேயே பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராகிறது இப்படம். கிரீடம், பொய் சொல்ல போறோம் படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்குகிறார் விஜய்.
சுதந்திரத்துக்கு முந்தைய சென்னை பட்டணத்தை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் அன்றைய சென்னையின் பெயரான, மதராச பட்டணத்தையே படத்தின் தலைப்பாக்கியிருக்கிறார்கள்.
நிறைய ஆராய்ச்சிகள் தேவைப்படும் படம் என்பதால் அடுத்த வருடமே படப்பிடிப்பு தொடங்குகிறது.