Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் பேட்டி!

Advertiesment
விஜய் பேட்டி!
, புதன், 7 ஜனவரி 2009 (21:23 IST)
விஜய் நடிக்கும் வில்லு படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி உடன்குடி அருகிலுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.

இங்குள்ள மணப்பாடு, தேரிக் குடியிருபூபு பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தபோது, ரசிகர்கள் ஏராளமாக குவிந்ததால் பலமுறை படப்பிடிப்பு தடைபட்டது. ரசிகர்களை அமைதிப்படுத்த விஜய் எடுத்த முயற்சி வீணானது.

பிறகு நெல்லை வந்த விஜய், நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, சென்னையில் 16 ஆம் தேதி தனது ரசிகர் மன்றம் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் உண்ணாவிரதப் நடைபெறும் என்றும், கறுப்பு உடையணிந்து அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் விஜய் கேட்டுக் கொண்டார்.

Share this Story:

Follow Webdunia tamil