Publish Date: Wed, 07 Jan 2009 (21:22 IST)
Updated Date: Fri, 14 Nov 2008 (13:00 IST)
மறைந்த இயக்குனர் ஸ்ரீதரின் படங்களை டிவிடி-யில் கொண்டு வரும் முயற்சியில் திரையுலகை சேர்ந்த சிலர் இறங்கியிருக்கிறார்கள். வரவேற்கப்பட வேண்டிய முயற்சி இது.
காப்பிரைட்டை பொறுத்தவரை தமிழ் சினிமா பொறுப்பில்லாமலே இருந்து வந்தது. ஒரு இயக்குனர் தான் இயக்கிய படங்களை டிவிடி தொகுப்பாக கொண்டுவர நினைத்தாலும் முடியாது. படத்தின் காப்பிரைட் படத்துக்கு சம்பந்தமில்லாத யாரிடமாவது இருக்கும்.
பாலசந்தர் தனது படங்களை டிவிடி தொகுப்பாக இதுவரை வெளியிடாததற்கு காப்பிரைட் பலர் கைகளில் இருப்பதே காரணம் என கூறப்படுகிறது.
இந்த சூழலில் ஸ்ரீதர் படங்களின் டிவிடி தொகுப்புக்கான முயற்சிகள் நடந்து வருவது பாராட்டுக்குரியது.
முயற்சி பாதியில் முறியாமல் இருக்க வேண்டும்.