Publish Date: Wed, 07 Jan 2009 (21:18 IST)
Updated Date: Thu, 13 Nov 2008 (15:30 IST)
இலியானாவை தமிழுக்கு அழைத்துவர தலைகீழாக நின்று பார்க்கிறார்கள் நம்மவர்கள். கேடியில் அறிமுகமான என்னை தமிழ் சினிமா உதாசீனப்படுத்திவிட்டது என்று இன்னும் பிடிகொடுக்காமல் நழுவிக் கொண்டிருக்கிறார் இந்த இடையழகி.
முன்வாசல் வழி வரத் தயங்குகிறவரை புறவாசல் வழியாக அழைத்து வரும் வேலைகள் நடக்கிறது.
தெலுங்கில் இலியானா, ஜுனியர் என்.டி.ஆருடன் நடித்த ராக்கி படத்தை அதே பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். இலியானாவின் கிளாமரை மட்டும் நம்பி மொழிமாற்றம் செய்யப்படும் இந்தப் படத்தின் இன்னொரு சர்ப்ரைஸ், சார்மி.
தெலுங்கு தேசத்தின் நமிதாவான சார்மி, ராக்கியில் தனது தாராளத்தின் உச்சத்தை தொட்டுள்ளாராம்.