நாகா இயக்கும் ஆனந்தபுரத்து வீடு படத்தின் ஷூட்டிங் நடந்து வருவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ்.
நந்தா, சாயாசிங் நடிக்கும் ஆனந்தபுரத்து வீடு, நாகாவின் மர்மதேசம் போலவே திகில் கதை. இதன் படப்பிடிப்பு தொடங்கி மூணாறு, பொள்ளாச்சி பகுதிகளில் தொடர்ந்து நடந்து வருகிறது.
படத்தில் நந்தா, சாயாசிங்குடன் கிருஷ்ணா, கலைராணி ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆரியன் என்ற மூன்று வயது குழந்தையும் படத்தில் பிரதான வேடத்தில் வருகிறது.
அமெரிக்காவில் வசிக்கும் அருண்மணி பழனி ஒளிப்பதிவு செய்கிறார். இசை ராஜேஷ் கிருஷ்ணா. இது அவருக்கு முதல் படம்.
அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார்.