மனிதருக்கு உடம்பெல்லாம் மச்சம். நடிக்கிற படத்திலெல்லாம் நாயகியுடன் டூயட் பாடுவதென்றால் சும்மாவா?
போக்கிரியில் அசினுடன் சுட்டும் விழிச் சுடரே பாடலுக்கு ஆடிய வடிவேலு, வில்லு படத்தில் நயன்தாராவுடன் ஆடினார். சமீபத்தில் இந்தப் பாடல் ஏவி.எம். ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது.
பில்லா படத்தில் இடம்பெறும் மை நேம் இஸ் பில்லா பாடலின் ரீ-மிக்ஸிற்கு கலர்ஃபுல் காஸ்ட்யூமில் நயன்தாராவுடன் சேர்ந்து ஆடினார் வடிவேலு.
போக்கிரியில் அசின், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டில் பூர்ணா, இந்திரலோகத்தில் நா. அழகப்பனில் ஸ்ரேயா, இப்போது நயன்தாரா.
புயலின் அடுத்த டூயட் பார்ட்னர் யாரோ!